• Sep 20 2024

அடுக்குமாடி குடியிருப்பில் காருடன் மோதி கடும் விபத்துக்குள்ளான பிரபல நடிகை-உயிர்பிழைப்பது கடினம்! குடும்பத்தினர் தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல ஹாலிவுட் நடிகை அன்னே ஹெச் வால்கோனா, ஐ நோ வாட் யு டிட் லாஸ்ட் சம்மர், வாக் த டாக், சிக்ஸ் டேஸ் செவன் நைட்ஸ், சைக்கோ, கேட் பைட், தி லாஸ்ட் வேர்ல்ட் உட்பட பல படங்களில் நடித்திருக்கின்றார்.இது தவிர 'அனதர் வேர்ல்ட்' என்ற அமெரிக்க டிவி தொடரிலும் நடித்திருக்கின்றார்.

இந்த நிலையில் இவர் தனது காரில் லாஸ் ஏஞ்சல்ஸின் புறநகர் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது கார் எதிர்பாராத விதமாக சாலையில் இருந்த விலகி ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. வீட்டின் முன்பகுதியும் தீப்பிடித்து எரிந்து சேதமானது.

தகவலறிந்து விரைந்து வந்த 60க்கும் மேற்பட்டத் தீயணைப்புத் துறையினர் தீயை போராடி அணைத்தனர். இந்த விபத்தில் நடிகை அன்னே ஹெச் படுகாயமடைந்தார். அவருடைய முதுகு பகுதியில் அதிகமான தீக்காயங்கள் ஏற்பட்டன. அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவருக்கு மூளையில் தீவிர காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அவர் உயிர் பிழைப்பது கடினம் என்றும் அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்த விபத்து அதிவேகம் காரணமாக ஏற்பட்டதாகவும் அவர் மது அருந்துவிட்டு கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும், போலீசார் இதை உறுதிப்படுத்தவில்லை. வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் ரசிகர்களை கடும் சொகத்துக்குள் தள்ளியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement