• Nov 19 2024

'நேர்மையாக வரி செலுத்துபவர்' என்ற கௌரவிப்பை பெற்ற பிரபல நடிகை; யார் தெரியுமா

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பொதுவாக சர்வதேச அமைப்புக்கள் மற்றும் நாடுகளின் அரசுகள் அவற்றின் நிதி அமைச்சகங்களின் கீழ் அமையும் அமைப்புக்கள் மூலமாக வரிகளை தனிநபர்களிடமிருந்தோ அல்லது நிறுவனங்களிடமிருந்தோஅறவிடுகின்றன.

அதாவது குறிப்பாக சுங்கவரி, காணிக்கை, குத்தகைக்காரர் நிலக்கிழாருக்கு செலுத்தும் வரி, கடமை வரி, விருப்ப வரி, கலால், மானியம், அரசு உதவி வரி, வாகன வரி, மதிப்புக் கூட்டு வரி, சம்பளம் பெறுவதற்கான வரி எனப் பல வழிகளிலும் வரி வசூல் செய்யப்படுகிறது. இதற்கு நடிகர், நடிகைகள் ஒன்றும் விதி விலக்கானவர்கள் அல்ல. இவர்களும் செலுத்தியே ஆக வேண்டும்.

திரைப்பிரபலங்களில் கூட ஒரு சிலர் முறையாக வரியினை செலுத்தி வந்தாலும் சிலர் செலுத்துவதில் தாமதம் செய்கின்றனர். முறைப்படி வரி செலுத்தாமல் பல சர்ச்சைகளில் சிக்கிய பிரபலங்களும் உண்டு.

இந்தநிலையில் அப்படி எந்த ஒரு பிரச்சனையிலும் சிக்காமல் நேர்மையாக தான் கட்ட வேண்டிய வரியை செலுத்தியுள்ளார் மலையாள நடிகையாகிய மஞ்சு வாரியர். இவர் தனுஷுக்கு ஜோடியாக 'அசுரன்' படத்தில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே வரி செலுத்துவதில் இவரது நேர்மையை கௌரவிக்கும் விதமாக மத்திய அரசு இவருக்கு 'நேர்மையாக வரி செலுத்துபவர்' என்கிற சான்றிதழை கொடுத்து கௌரவித்துள்ளது.

மேலும் நடிகை மஞ்சு வாரியர் தற்போது தல அஜித் நடித்து வருகின்ற 61 ஆவது படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதனால் இந்த தகவலை அஜித் ரசிகர்கள், தனுஷ் ரசிகர்கள் எனப் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement