பிரபல நடிகர் அஜித்குமார் சமீபத்தில் நடித்திருந்த நேர்கொண்ட பார்வை, வலிமை என இரு படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தபோதிலும் மீண்டும் மூன்றாவது முறையாக இயக்குநர் ஹெச் வினோத், தயாரிப்பாளர் போனி கபருடன் கூட்டணி அமைத்துள்ளார் அஜித் குமார்.
அதன்படி தற்போது துணிவு படம் உருவாகியுள்ளது.பல நாட்களாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்த இப்படத்தின் ஷூட்டிங் மீண்டும் பாங்காக்-ல் தொடங்கியுள்ளது.எனினும் இதற்காக அஜித் மற்றும் மஞ்சு வாரியர் அங்கு செல்லும் போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகின.
இவ்வாறுஇருக்கையில் தற்போது துணிவு திரைப்படத்தின் போஸ்ட் திரையரங்க உரிமையை பிரபல OTT நிறுவனம் Netflix கைபற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் ஷூட்டிங் கூட முடியாத நிலையில் இப்படத்தை பல கோடி கொடுத்து அந்த நிறுவனம் கைபற்றியிருப்பதாக கூறப்படுகின்றது.
Listen News!