• Sep 20 2024

சூப்பர் ஸ்டார் வீட்டிற்கு திடீரென சென்ற பிரபல ஆன்மீக குரு; விருந்தோம்பலிலும் கலந்துகொண்டுள்ளார்

stella / 1 year ago

Advertisement

Listen News!

அண்ணாத்த' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர்.இந்த படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனம்  தயாரிப்பதோடு  கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குநர் நெல்சன் இயக்குகிறார். இப்படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சென்னையில் துவங்கியது.இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் மோகன்லால், ஷிவ ராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்கள்.


இப்படத்துக்கு அனிரூத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குநர் ஸ்டன் சிவா  ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குநராக பணிபுரிகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி  ரஜினிகாந்த் பிறந்தநாளில் ஜெயிலர் படத்தின் சிறிய முன்னோட்டம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


பொதுவாக ரஜினிகாந்த் நடிப்பைத் தாண்டி ஆன்மீகத்திலும் அதிக ஈடுபாடு உடையவர். இதனால் அடிக்கடி திருப்பதிக்குச் செல்வதையும் வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில்  ரஜினிகாந்த் வீட்டிற்கு சமீபத்தில் ஆன்மீக குரு குருதேவ் ஶ்ரீ ஶ்ரீ ரவி ஷங்கர் சென்றுள்ளார். அங்கு அவரிடம் ரஜினிகாந்த் & லதா ரஜினிகாந்த் ஆசிர்வாதம் பெற்றதாகவும்,ரஜினிகாந்த்  இல்லத்தில் ரவி ஷங்கர் மதிய உணவு உண்டதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement