• Sep 20 2024

நானே வருவேன் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தைக் கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி- அட இந்த டிவியா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம்.இந்த திரைப்படத்தில், தனுஷுடன் நித்யா மேனன், பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ், ராஷி கன்னா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.அmத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள நானே வருவேன், வாத்தி உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதில், நானே வருவேன் திரைப்படத்தை தனுஷின் அண்ணனும் இயக்குநருமான செல்வராகவன் இயக்கி வருகிறார். 

 இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பும் நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.மேலும், இந்த படத்தில் தனுசுடன் நடிகை இந்துஜா  நடிக்கிறார். மேலும் ஒரு ஹீரோயினாக ஸ்வீடன் நடிகை Elisabet Avramidou Granlund நடித்துள்ளார். 


அந்த வகையில், சமீபத்தில் நானே வருவேன் படத்தின் போஸ்டர்கள் சிலவற்றை படக்குழு அடுத்தடுத்து வெளியிட்டிருந்தது. அந்த போஸ்டரில், "விரைவில் திரை அரங்குகளில்" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்நிலையில், நானே வருவேன் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை கைபற்றியுள்ளது தொடர்பாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் ஒன்று கிடைத்துள்ளது. 

அதன்படி, நானே வருவேன் படத்தின் சாட்டிலைட் உரிமத்தினை மிக பெரிய தொகைக்கு பிரபல சேனலான சன் டிவி வாங்கி உள்ளதாக தெரிவிக்கின்றது.இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்றும் தகவல்கள் குறிப்பிடுகின்றது.


Advertisement

Advertisement