ஒரு வங்கி ஊழியராக இருந்து தற்பொழுது இந்த அளவில் பிரபலமான இயக்குநராக வலம் வருபவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் தன்னுடைய முதல் படமான மாநகரம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தார்.
இதனைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான கைதி மாஸ்டர் ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன.கைதி கொடுத்த வெற்றியின் காரணமாகவே அவருக்கு விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. மாஸ்டர் திரைப்படமும் அவருக்கு வெற்றிப் படமாகவே அமைந்தது. குறிப்பாக விஜய் சேதுபதி நடித்திருந்த பவானி கதாபாத்திரம் தமிழ் சினிமாவின் சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து தன் மனம் கவர்ந்த நடிகரான கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்னும் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு வசூலிலும் அள்ளிக் குவித்தது.
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கே லோகேஷின் படத்தில் நடிக்க விருப்பப்படுகிறேன் என்று ஒரு மேடையில் கூறியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலுக்காக மக்களை லோகேஷ் சந்தித்திருக்கிறார் .அதில் ஒரு நபர்,"தொடர்ந்து போதைப் பொருட்களை பற்றி படம் எடுக்கிறீர்கள். அதனால் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளீர்களா. அல்லது உங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் பாதிப்படைந்தார்களா, இல்லை அதனை கடந்து வந்துள்ளீர்களா, எதன் காரணமாக போதைப் பொருளின் தாக்கத்தை வைத்தே படம் எடுக்கிறீர்கள்?" என்று கேள்வி கேட்டார்.
அதற்கு,"கைதி திரைப்படத்தில் டிரக்ஸ் சம்பந்தமாக சில கிரவுண்ட் வொர்க் செய்தேன். அப்போதுதான் போதைப் பொருளால் எந்த அளவிற்கு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று எனக்கு தெரிந்தது. அந்த பாதிப்பிலிருந்து மக்கள் விடுபடுவதற்காகவே பெரிய ஹீரோக்களை வைத்து இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும்போது அந்த கதாநாயகர்கள் வழியாக அந்தக் கருத்தை தொடர்ச்சியாக என்னுடைய படங்களில் கூறுகிறேன்" என்று லோகேஷ் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
பிற செய்திகள்
- நடிகை ஹன்சிகாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்- யாரெல்லாம் போயிருக்கிறாங்க என்று பாருங்க
- ஏ.கே 61 படத்தில் இணைந்த பிரபல யூடியுப் நடிகை- அடடே இவரும் நடித்து வருகின்றாரா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!