பொதுவாக நடிகர்கள் பொது இடங்களுக்கு வருகிறார்கள் என்றாலே எப்போதும் ஒரு பெரிய கூட்டம் கூடிவிடும். அதுவும் நடிகர் நடிகைகள் உடன் செல்பி எடுத்துக்கொள்ள தான் அதிகம் பேர் போட்டி போட்டு முந்துவார்கள்.
பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் அவரது மனைவி ஆலியா பட் மற்றும் குழந்தை உடன் அடிக்கடி வெளியில் வரும்போது எடுக்கும் போட்டோக்கள் இணையத்தில் வைரல் ஆகின்றன.
இருப்பினும் குழந்தையின் போட்டோவை வெளியிட வேண்டாம் என பத்ரிக்கையாளர்கள் மற்றும் போட்டோகிராபர்களை ரன்பீர் கேட்டுக்கொண்டார். அத்தோடு அவரது குழந்தை புகைப்படம் எதுவும் வெளிவரவில்லை.
அதே நேரத்தில் ரன்பீர் உடன் செல்பி எடுக்கவும் அதிகம் பேர் வருகிறார்கள்.இவ்வாறுஇருக்கையில் தற்போது ரன்பீர் உடன் செல்பி எடுக்க ரசிகர் ஒருவர் பலமுறை முயற்சிக்கிறார். ரசிகரின் செயலை பார்த்து கோபமான ரன்பீர் அவரது போனை வாங்கி தூக்கி எறிந்துவிடுகிறார்.
மேலும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவ வருகிறது. ரன்பீர் செயலுக்கு பலரும் அதிர்ச்சி தெரிவித்து இருக்கின்றனர்.
What just happened here!? 🤔#RanbirKapoor #Viral pic.twitter.com/oHjJdSINfP
Listen News!