• Sep 20 2024

படம் வரைந்து ஆரத்தி எடுத்து வழிபடும் ரசிகர்! நெகிழ்ச்சியான வீடியோவை பகிர்ந்த ராகவா லாரன்ஸ்!

Nithushan / 3 months ago

Advertisement

Listen News!

பல பிரபலங்கள் தங்களிடம் உள்ள பணத்தை ரசிகர்களுக்காக , ஏழை மக்களுக்காக செலவிடுகிறார்கள்  அவ்வாறே சமீபத்தில் ஏழை மக்களுக்கு பல உதவிகளை செய்து வரும் நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள வீடியோ  நெகிழ்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.


நடன இயக்குனராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி தொடர்ந்து நடிகர் , இயக்குனர் என பல பரிமாணங்களில் கலக்குபவர் ராகவா லாரன்ஸ் ஆவார். இவருக்கு தெலுங்கிலும் ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளதோடு தமிழில் இவர் நடிக்கும் பேய் படங்களுக்கு என்று தனி மார்க்கெட் உள்ளது எனலாம்.


இவ்வாறு இருக்கும் இவர் சமீபத்தில் மாற்றம் என்னும் ஒரு அறக்கட்டளையை ஆரம்பித்து அதன் மூலம் பல ஏழைகளுக்கு பல உதவிகளை செய்து வருகின்றார்.இதனால் ரசிகர் ஒருவர் இவரின் படத்தை ஆரத்தி காட்டியவாறே சுவற்றில் வரைந்து மனித கடவுள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை ராகவா லாரன்ஸ் தனது இன்ஸ்ட்டா  பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


Advertisement

Advertisement