தமிழ் சினிமாவில் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், திரைப்படப் பாடலாசிரியர் எனப் பன்முகம் கொண்ட கலைஞராக திகழ்ந்து வருபவரே நடிகர் தனுஷ். 'திருடா திருடி' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான இவர் 'சுள்ளான், புதுப்பேட்டை, வேலையில்லாப் பட்டதாரி, மாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அத்தோடு பல விருதுகளையும் வென்றிருக்கின்றார்.
இவர் தற்போது 'கேப்டன் மில்லர்" என்ற படத்தில் மூன்று வித்தியாசமான லுக்கில் வரவிருக்கின்றார். இதன் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது. அத்தோடு இது பான் இந்தியப் படமாகவும் உருவாக இருப்பதாக கூறப்படுகின்றது. அத்தோடு தனுஷ் தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் 'வாத்தி' என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு கட்டத்தை அடைந்திருக்கின்றது.
இந்த நிலையில் தனுஷின் கேரியரில் என்றுமே இல்லாத அளவிற்கு ஒரு விஷயம் 'கேப்டன் மில்லர்' படத்தினூடாக நடந்திருக்கின்றது. அதாவது 'கேப்டன் மில்லர்' படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி 24 மணிநேரத்திற்குள் 5.5 மில்லியன் வியூஸ் கிடைத்திருக்கின்றது. அதுமட்டுமல்லாது கோலிவுட்டில் குறைந்த நேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட அறிவிப்பு வீடியோ என்ற சாதனையையும் பெற்றிருக்கின்றது இந்தப்படம். இதை கேள்விப்பட்ட நடிகர் தனுஷ் மட்டுமன்றி அவரின் ரசிகர்களும் மிகுந்த சந்தோசத்தில் உள்ளனர்.
இவ்வாறு தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் தற்போது தனது சகோதரனாகிய இயக்குநர் செல்வராகவனின் இயக்கத்தில் 'நானே வருவேன்' என்ற படத்தில் நடித்து முடித்திருக்கின்றார். அதுமட்டுமல்லாது நடிகர் தனுஷின் அண்ணனாகிய செல்வராகவனும் இப்படத்தில் தனுஷுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனால் 'கேப்டன் மில்லர்' போன்றே இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புக்கள் கிளம்பியிருக்கின்றன.
பிற செய்திகள்
- கதாநாயகியின் ஆடையைத் துவைத்த இயக்குநர்- மனைவிக்கு அனுப்பப்பட்ட புகைப்படம்-நடந்தது என்ன..?
- விடுதியில் ஒன்றாக இருந்தது ஏன்? நரேஷ் பாபுவின் தொடர்பை பற்றி விளக்கிய நடிகை பவித்ரா!
- சூர்யாவின் இரண்டு சூப்பர்ஹிட் படங்களை மாதவன் நிராகரித்தாரா…!
- ரசிகர்களின் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் குட்டி ஆடையில் குத்தாட்டம் போட்ட லாஸ்லியா..
- நடிகை தேவயானிக்கு ஃபேவரைட் டிஷ் இது தானாம்-இந்த இயக்குநருக்கும் அதில் பங்கு இருக்கின்றதா..?!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!