• Nov 14 2024

உதயநிதி கலந்து கொண்ட நிகழ்ச்சியில்... இருக்கைக்கு ஏற்பட்ட சண்டை..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வந்தவர் நடிகர் உதயநிதி. சினிமாவைத் தண்டி இவர் தற்போது அரசியலில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார். அந்தவகையில் சமீபத்தில் தான் அமைச்சர் பதவியையும் ஏற்றிருந்தார்.


இந்நிலையில் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி வருகிற ஜனவரி மாதம் 13-ஆம் தேதி ஒடிஷாவில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து ஹாக்கி சாம்பியன் கோப்பையை அறிமுகம் செய்யும் விழா சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஒலிம்பிக் சாம்பியன் பாஸ்கரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அப்போது, அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஹாக்கி வீரர்களுக்கு இடம் ஒதுக்காமல் அமைச்சர்கள்  மற்றும் அதிகாரிகளுக்கு மட்டுமே மேடை ஒதுக்கப்பட்டிருந்தது. 


இதனால் அதிருப்தி அடைந்த ஒலிம்பிக் சாம்பியன் பாஸ்கரன், கோபத்தில் அங்கிருந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது ஹாக்கி நிகழ்ச்சியா அல்லது விருது வழங்கும் விழாவா என கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த அதிகாரிகள் பலரும் பாஸ்கரனை சமாதானம் செய்ய முயன்றனர். இருந்த போதும் அவர் ஹாக்கி வீரர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாது தொடர்ந்து விளையாட்டுத்துறை அமைச்சரான நடிகர் உதயநிதியிடம் தனது அதிருப்தியை பாஸ்கரன் தெரிவித்தார். இதனையடுத்து விழா மேடையின் முதல் வரிசையில் ஹாக்கி வீரர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டது. 


இதன் பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சரான நடிகர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர்களிடையே விளையாட்டின் மீதான ஆர்வத்தையும், ஆர்வமுள்ளவர்களுக்கான வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டியது  நம்முடைய பொறுப்பு என தெரிவித்தார். அத்தோடு மேடையில் வீரர்களுக்கு இருக்கை ஒதுக்கப்படாதது தொடர்பாக பேசியவர், இனி  இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காது எனவும் உறுதியளித்தார்.

Advertisement

Advertisement