• Sep 20 2024

மனைவியைத் திருமணம் செய்ய முயலும் நண்பன்..? விழுந்து விழுந்து சிரிக்க 'அடியே' படத்தின் திரைவிமர்சனம் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

'திட்டம் இரண்டு' என்ற படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அடியே'. இதில் ஜீ. வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி. கிஷன், மதும்கேஷ் பிரேம், RJ விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மேலும் கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார்.

காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படமானது இன்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தினுடைய திரைவிமர்சனத்தைப் பார்ப்போம்.


கதைக்களம் 

அந்தவகையில் மிகச் சாதாரண குடும்பத்தை சேர்ந்த இளைஞனான ஜிவி பிரகாஷ்குமார் கௌரி கிஷனைக் காதலிக்கிறார். அதாவது இவர்கள் இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். ஆனால் ஜிவி பிரகாஷ் தன்னைக் காதலிப்பது கௌரி கிஷனுக்கு தெரியாது. 

இவ்வாறாக தனது காதலை பல வருடங்களாக சொல்லாமல் இருந்து வந்த ஜிவி பிரகாஷ் ஒருநாள் தன் காதலை கௌரி கிஷனிடம் சொல்லப் போகும் நேரத்தில் விபத்து ஒன்றில் சிக்கி கோமா நிலைக்குச் செல்கிறார். 

பின்னர் கண் விழித்துப் பார்க்கும் போது கௌரி கிஷன் ஜிவி பிரகாஷிற்கு மனைவியாகத் தெரிகிறார். இவ்வாறாக நிஜ உலகத்தில் கௌரி கிஷனிடம் காதலை தெரிவிக்க முடியாமல் தவித்து வருகின்ற ஜிவி பிரகாஷ், கற்பனை உலகத்தில் அவரை மனைவியாக்கி குடும்பம் நடத்துகிறார். அதேபோன்று நிஜ உலகில் வேலை இல்லாமல் இருப்பவர் கற்பனை உலகில் ஆஸ்கர் வென்ற மிகப்பெரிய மியூசிக் டைரக்டர் ஆக இருக்கின்றார். 

இவ்வாறாக நிஜ உலகம், கற்பனை உலகம் என மாறி மாறி வாழ்க்கை நடாத்தும் ஜிவி.பிரகாஷிற்கு ஒரு கட்டத்தில் என்ன நடக்கிறது என்ற உண்மை புரிகிறது. ஆனால் அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக ஜி.வி.பிரகாஷின் நண்பர் கௌரி கிஷனை திருமணம் செய்ய முயல்கிறார். 

கற்பனை உலகில் கௌரி கிஷனை மனைவியாக நினைத்து குடும்பம் நடாத்தி வரும் ஜிவி, பின்னர் இந்தத் திருமணத்தை தடுத்து கௌரி கிஷனிடம் எப்படி ஜி.வி.பிரகாஷ் தன் காதலை சொன்னார்? அதன் பின்னர் நடந்தது என்ன என்பதே இப்படத்தினுடைய மீதிக்கதையாக அமைந்துள்ளது.


நடிகர்களின் நடிப்பு 

முதல் நடித்த படங்களை விட இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷின் நடிப்பு சிறப்பாக உள்ளது. அதாவது காதலை சொல்ல முடியாத விரக்தியின் உச்சம், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என குழம்பும் மனநிலை, காதலிக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி என அனைத்து சந்தர்ப்பங்களிலும் சூப்பராக நடித்துள்ளார்.

அதேபோன்று ஹீரோயினாக வரும் கௌரி கிஷன் காதல் காட்சிகளில் ரசிகர்களை சுண்டி இழுக்கின்றார். 

அதுமட்டுமல்லாது வெங்கட் பிரபுவும் சொல்லிக் கொள்ளும் படியான கேரக்டரில் நடித்துள்ளார்.


குறை, நிறை 

ஆரம்பத்தில் படம் பார்ப்போர் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தி பின்னர் இரண்டாம் பாதியில் விளக்கம் கொடுத்து இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் கதையால் ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளார்.

மேலும் படம் முழுக்க கற்பனை உலகத்தை கலந்து ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார். 

மேலும் நிஜ மற்றும் கற்பனை உலகத்தில் பாடல் வரிகள் மாற்றம், ஏ.ஆர்.ரஹ்மான் பாட்டை போட்டு ஆஸ்கர் வெல்வது, ஆஸ்கர் மேடையில் ஏ.ஆர்.ரஹ்மான் பேச்சை கிண்டல் செய்வது என பல இடங்களில் ரசிகர்களை சிரிக்கவும், ரசிக்கவும் வைத்துள்ளார்.

அதுமட்டுமல்லாது ஜி.வி.பிரகாஷ் - கௌரி கிஷன் இடையேயான காதல் காட்சிகளும் சிறப்பாக அமைந்திருக்கின்றது.

அதுமட்டுமல்லாது இசை மற்றும் ஒளிப்பதிவு படத்துக்கும் பிளஸ் ஆக அமைந்துள்ளது. 


தொகுப்பு 

ஆக மொத்தத்தில் 'அடியே' படமானது போரடிக்காமல் ரசிகர்களை சிரிக்கவும், என்ஜாய் பண்ணவும் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement