• Sep 20 2024

230 அடி உயரத்தில் பிரம்மாண்ட கட் அவுட் அமைத்து பாலாபிஷேகம்! விஜய் ரசிகர்களை மிஞ்சிய பிரபாஸ் வெறியர்கள்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

'பாகுபலி' படத்தின் மூலம் உலகளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ். அவர்  இன்று தனது 44வது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறார். 

இந்த நிலையில். சுமார் 230 அடி உயரத்திற்கு 'சலார்' படத்திற்கு கட் அவுட்டை வைத்துள்ளனர் தெலுங்கு ரசிகர்கள். பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு ஏராளமான ரசிகர்கள் குறித்த கட் அவுட்டுக்கு முன் கூடி. கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்து அவரின் பிறந்த நாளை கொண்டாடிய காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன. 

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம்  வரும் நடிகர் பிரபாஸ்.சென்னையில் 1979ம் ஆண்டு அக்டோபர் 23ம் திகதி பிறந்துள்ளார்.அத்துடன். 100 கோடி ரூபா சம்பளம் வாங்கும் தெலுங்கு நடிகராக இவர் முன்னணியில் திகழ்கிறார்.


பாகுபலி 2 படத்துக்கு பிறகு பிரபாஸ் நடித்த சாஹோ, ராதே ஷ்யாம்,  ஆதிபுருஷ் போன்ற படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவினாலும் சலார் கண்டிப்பாக ஹிட் கொடுக்குமென ரசிகர்கள் எதிர்பார்கின்றனர்.

இவ்வருட இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படம் வெளியாகவுள்ளது. 

இதேவேளை, 'சலார்' திரைப்படம் ஷாருக்கானின் 'டன்கி' படத்துடன் மோத உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement