தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான ஷங்கர் இயக்கத்தில் காலத்திற்கு காலம் பல படங்களும் உருவாகிய வண்ணம் தான் இருக்கின்றன. அந்தவகையில் தற்போது கமல்ஹாசனின் 'இந்தியன் 2' மற்றும் ராம்சரணின் 'ஆர்.சி 15' ஆகிய திரைப்படங்கள் பிரமாண்டமாக தயாராகி வருகின்றன.
இந்த இரண்டு படங்களின் வேலைகளையும் ஒரே நேரத்தில் சுறுசுறுப்பாக கவனித்து வருகிறார் ஷங்கர். மேலும் இவர் இந்த இரண்டு படங்களையும் இயக்கி முடித்த பின்னர் அடுத்ததாக வரலாற்று கதையம்சம் கொண்ட ஒரு படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கின்றாராம். அதாவது சமீபத்தில் மணிரத்னம் 'பொன்னியின் செல்வன்' நாவலை படமாக எடுத்திருந்தார்.
அப்படாமானது வரலாறு காணாத அளவிற்கு வெற்றி கண்டதால், அதே பார்முலாவை பின்பற்ற திட்டமிட்டுள்ள இயக்குநர் ஷங்கர், சு.வெங்கடேஷன் எழுதிய 'வேள்பாரி நாவலை' மையமாக வைத்து வரலாற்று படம் ஒன்றை பிரமாண்டமாக இயக்க திட்டமிட்டுள்ளாராம்.
அதுமட்டுமல்லாது இதற்கான உரிமையை வாங்கி ஸ்கிரிப்ட் தயாரிக்கும் பணியும் மும்முரமாகவும், விறுவிறுப்பாகவும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் யார் நடிப்பார்கள் எனப் பலரும் எதிர்பார்த்திருந்த வேளையில் அந்த நடிகர் பட்டியலில் முதலில் சூர்யா மற்றும் யாஷ் பெயர் தான் உலாவியது.
பின்னர் இறுதியாக பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை ஷங்கர் தேர்வு செய்துள்ளதாக சமீபகாலத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு இப்படத்தை ஆயிரம் கோடி பட்ஜெட்டில் மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க இப்படத்தில் ஷங்கர் தமிழ் ஹீரோவை நடிக்க வைக்காதது ஏன் என்கிற கேள்வியும் பல ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து எழுந்து வந்தது.
இந்நிலையில் தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது. அந்தவகையில் வேள்பாரி கதையை படமாக எடுத்த முடிவு செய்ததும், நடிகர் விஜய்யை தான் அப்படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க இயக்குநர் ஷங்கர் முதலில் ஆசைப்பட்டாராம்.
அதுமட்டுமல்லாது இப்படத்தை தயாரிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை தான் முதலில் அணுகி இருந்தாராம். ஆனால் அவர்களோ படத்தின் பட்ஜெட்டை கேட்டு சற்று ஜகா வாங்கியதால், பாலிவுட் தயாரிப்பாளரை நோக்கி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து தான் இப்படத்தில் விஜய்யை நடிக்க வைக்கும் முடிவை கைவிட்டுவிட்டாராம் ஷங்கர்.
Listen News!