• Sep 20 2024

இளம் வயதில் தனது தந்தையுடம் பிளாக் அன்ட் வைட்டில் ராதிகா எடுத்த போட்டோ- இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 1978ம் ஆண்டு வெளியான கிழக்கே போன ரயில் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் ராதிகா சரத்குமார். இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இதன்பின் ரஜினிகாந்த், கமல் ஹாசன் என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார். அந்த வகையில் வாரிசு திரைப்படத்தில் தற்பொழுது நடித்து வருகின்றார்.


மேலும் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கால்பதித்த ராதிகா, பல வெற்றி சீரியல்களையும் கொடுத்தார். இது தவிர ராடன் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார்.

நடிகை ராதிகா பழம்பெரும் நடிகர் எம்.ஆர். ராதாவின் மகள் என்பதை நாம் அறிவோம். இந்நிலையில், தனது தந்தை எம்.ஆர். ராதாவுடன் நடிகை ராதிகா எடுத்துக்கொண்ட இளம் வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. 


Advertisement

Advertisement