ஆக்ஷன் கிங் அர்ஜுன் குடும்பத்திற்கு வரும் புது வரவு குறித்து அறிந்த பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நடிகர் அர்ஜுனின் சகோதரியின் மகன் த்ருவா சார்ஜா. கன்னட படங்களில் நடித்து வரும் த்ருவாவின் காதல் மனைவியான ப்ரேரனா சங்கர் கர்ப்பமாக இருக்கிறார்.
பரந்த அளவிலான தயாரிப்புகளில் இருந்து தேர்வு செய்து, The Man Company, Wow & பல பிராண்டுகளின் அனைத்து அத்தியாவசிய அழகு மற்றும் ஒப்பனை தயாரிப்புகளையும் சேமித்து வைக்கவும்.
அத்தோடு நிறைமாத கர்ப்பிணியான ப்ரேரனாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தான் அப்பாவாகப் போகும் சந்தோஷத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார் த்ருவா.
மேலும் இந்த மாதமே ஜூனியர் த்ருவா வரவிருக்கிறார். இத்தனை மாதங்களாக இந்த நல்ல விஷயத்தை கூறாமல் அமைதியாக இருந்துவிட்டீர்களே அண்ணா என்கிறார்கள் ரசிகர்கள்.
த்ருவாவின் அண்ணனும், மறைந்த நடிகருமான சிரஞ்சீவியின் மனைவி மேக்னா ராஜ், த்ருவா, ப்ரேரனாவை வாழ்த்தி கமெண்ட் போட்டிருக்கிறார்.
மேக்னா ராஜ் 4 மாத கர்ப்பிணியாக இருந்தபோது சிரஞ்சீவி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.அத்தோடு சிரஞ்சீவியின் குழந்தை ராயனுக்கு ரூ. 10 லட்சம் மதிப்புள்ள வெள்ளித் தொட்டில் வாங்கிக் கொடுத்தார் த்ருவா.
த்ருவா சார்ஜாவுக்கும், ப்ரேரனாவுக்கும் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. எனினும் இதையடுத்து 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் அவர்களின் திருமணம் நடைபெற்றது. பல ஆண்டுகளாக காதலித்து வந்த அவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.சிரஞ்சீவிக்கு திருமணமான மறு ஆண்டு தான் த்ருவாவுக்கு திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!