• Sep 20 2024

நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து வெளியாகிய புதிய மாஸ் அட்டேட்- அடுத்த கட்டத்திற்கு நகரும் வாரிசு திரைப்படம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் விஜய் தற்பொழுது வாரிசு என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குநரான வம்சி இயக்கி வருவதோடு  தயாரிப்பாளர் தில் ராஜு & ஷிரிஷ் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்து வருகின்றது.

இப்படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய பட்டாளமே நடித்து வருகின்றனர். இப்படத்தின் 4ம் கட்டப் படப்பிடிப்பானது தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ,கடந்த மாதங்களில்  நடைபெற்றது.


இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.இதற்காக விஜய் ஐதராபாத் சென்ற வீடியோ எல்லாம் வைரலானது.மேலும் இப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. 

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement