நடிகர் கமல்ஹாசன் 4 ஆண்டுகளுக்கு பிறகு நடித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசான படம் விக்ரம். இப்படத்தை இவரது தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இப்படம் எதிர்பார்த்ததை விட சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு வசூலிலும் அள்ளிக் குவித்தது.
இப்படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தனர். குறிப்பாக சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்களை மிரட்டியது. இந்தப் படத்தின் அடுத்த பாகத்திற்காக தற்போது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
மேலும் படத்தின் சக்சஸ் மீட்டில் விரைவில் இப்படத்தின் ஷுட்டிங் ஆரம்பமாகும் என்று கூறப்பட்டது.சர்வதேச அளவில் இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் இந்தப் படமானது 100வது நாளை திரையரங்குகளில் எட்டி சிறப்பான சாதனையை புரிந்துள்ளது.
இதையொட்டி படக்குழுவினர் போஸ்டர்களை வெளியிட்டு தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இந்த 100வது நாள் கொண்டாட்டத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அத்தோடு இந்தப் படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பே ஓடிடியிலும் வெளியானது. இருந்தப் போதிலும் இந்தப் படத்தை திரையரங்குகளில் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.கமல்ஹாசன் அடுத்ததாக இந்தியன் 2 படத்தில் இணைந்து நடித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!