நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வம்சி கூட்டணியில் உருவான திரைப்படம் தான் வாரிசு. இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளதோடு தமன் இசையமைத்துள்ளார். இவர்களோடு சரத்குமார், ஷ்யாம், பிரகாஷ் ராஜ், பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் ஒரு குடும்ப செண்டிமெண்ட் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.இதில் விஜய் பேசியது ரசிகர்களிடையே செம வைரலாக மாறியது.
இதைத்தொடர்ந்து வாரிசு படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் அமோகமான வரவேற்பை பெற்றுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.இதையடுத்து விரைவில் வாரிசு படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படத்துடன் அஜித்தின் துணிவு படமும் வெளியாகும் என்று கூறப்படுகின்றது.
இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.ஆனால் படத்தின் பின்னணி இசை வேலைகள் இன்னமும் முடிவடையாததால் சென்சாருக்கு டம்மி இசையை சேர்த்து தான் அனுப்பவுள்ளார்களாம். படம் வெளியீட்டிற்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் படத்தின் இசை வேலைகள் முடியாமல் இருப்பதால் இயக்குநர் வம்சி பதட்டமாக இருக்கிறாராம். இருப்பினும் குறித்த நேரத்திற்குள் படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகிவிடும் என ரசிகர்களால் நம்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Listen News!