• Sep 20 2024

சிபிராஜ் உடன் பல பிரபலங்கள் ஒன்றிணைந்த வட்டம் படம்-வெளியானது புதிய அப்டேட்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சிபிராஜ் மற்றும் ஆண்ட்ரியா கூட்டணியில் உருவாகியுள்ள 'வட்டம்' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.கமலகண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வட்டம்'.

மேலும் இந்த படத்தில் கதாநாயகனாக சிபிராஜும், முக்கிய கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியாவும் நடித்துள்ளனர்.முதல்முறையாக சிபியும், ஆண்ட்ரியாவும் இணைந்து நடித்துள்ளது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது என்று தான் கூற வேண்டும்.

இந்த படத்தில் சிபிக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார்.இவர்களுடன் நடிகை மஞ்சிமா மோகன் மற்றும் நடிகர் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தைட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து வருகின்றது. அத்தோடு இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படம் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.மேலும் ஒரு வட்டத்திற்குள் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. க்ரைம் திரில்லரில் உருவாகியுள்ள இந்த டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement