• Sep 20 2024

என்னது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் முடியப்போகுதா... அதிர்ச்சியில் ரசிகர்கள்... சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் புகைப்படம்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ரசிகர்களின் மனங்களை கவர்ந்த பல நெடும் தொடர்கள் இருந்தபோதிலும் கடந்த பல வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த தொடர் இப்போது முடியும் தருவாயில் உள்ளதுபோன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.


நான்கு அண்ணன் தம்பியின் பாச பிணைப்பாங்க இந்த நாடகம் இவ்வளவு நாள் அரங்கேறி வந்தது மேலும் அண்ணி இத்தொடரில் முக்கியமாக காணப்பட்டார். ஏராளமான பிரச்சினைகள் எல்லாம் தாண்டி தற்போது 1300 எபிசோடுகளை கடந்து ஓடிவரும் அந்த தொடர் விரைவில் முடிவடைய இருக்கிறது.இந்த தொடரில் நடிக்கும் நடிகர்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

தற்போது மீனாவின் அப்பா மருத்துவமனையில் இருக்கும் நிலையில் அவருக்கு நினைவு திரும்பி நடந்தது என்ன என போலீசிடம் கூறினால் மட்டுமே ஜீவா மற்றும் கதிர் வெளியில் வர முடியும் என்ற நிலை இருக்கிறது. அடுத்த எபிசோட்களில் அந்த நிகழ்வும் நடைபெற்று குடும்பம் ஒன்றாக இணைவதுடன் இந்த தொடர் நிறைவுக்கு வரவிருக்கிறது.

 

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் முடிவுக்கு வந்திருக்கிறது. ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் மொத்த குழுவினரும் இருக்கும் போட்டோ தற்போது வெளியாகி வைரலாகி இருக்கிறது அந்த புகைப்படம் இதோ.. 


 

Advertisement

Advertisement