தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் அஜித் நடித்த துணிவு படம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் தற்போது சக்கைப்போடு போட்டு வருகிறது. இப்படத்தினுடைய வெற்றியைக் கொண்டாடும் விதமாக அஜித் தன் குடும்பத்துடன் இணைந்து ஸ்கொட்லாந்து சென்றிருந்தார்.
இந்நிலையில் அஜித் ஸ்கொட்லாந்தில் இருந்து சென்னைக்குத் திரும்பியுள்ள புகைப்படங்கள், மற்றும் வீடியோக்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. அந்தவகையில் தற்போது அஜித் தனது தீவிர ரசிகனான சிறுவன் ஒருவருடன் செல்பி எடுத்திருக்கின்றார்.
பொதுவாகவே இவரை சினிமாவைத் தவிர்த்து நாம் அதிகம் காணுகிற ஒரு இடம் என்றால் அது ஏர்போட் தான். அந்த இடத்தில தான் தற்போதும் ஒரு சிறுவன் அஜித்துடன் போட்டோ எடுப்பதற்காக காத்துக் கொண்டு நின்றார். பாரபட்சம் பார்க்காத நம்ம அஜித் உடனே அந்த குட்டிப் பையனை கூப்பிட்டு அவனுடன் போட்டோ எடுத்துக் கொள்கின்றார். பின்னர் அங்கிருந்த போலீஸ் அஜித்தை பாதுகாப்பாக கூட்டிச் சென்று விடுகின்றனர்.
இவ்வாறு அஜித் ஸ்கொட்லாந்தில் இருந்து தற்போது சென்னை திரும்பி இருப்பதால், அவர் தனது அடுத்தப் படமான ‘ஏகே 62’ படத்தின் இயக்குநர் யார் என்பது குறித்த அறிவிப்பினை விரைவில் வெளியிடுவார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இதோ அஜித் சிறுவனுடன் போட்டோ எடுத்த அந்த வீடியோ..!
Listen News!