• Sep 20 2024

லியோ படத்திற்குப் பதிலாக வேறொரு படத்தைப் போட்ட பிரபல திரையரங்கு- கடுப்பாகி கத்திய ரசிகர்கள்

stella / 11 months ago

Advertisement

Listen News!


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடித்த லியோ படம் இன்று தியேட்டரில் வெளியானது.

லியோ படம் ஓடும் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது. விஜய்யின் பேனர்களுக்கு மாலை அணிவித்து, பாலாபிஷேகம் செய்து ரசிகர்கள் அமர்க்களப்படுத்தினார்கள்


தமிழ் நாட்டில் மட்டும் 850 க்கும் அதிகமான திரையரங்குகளில் லியோ படம் ரிலீஸாகி இருக்கிறது என்று கூறப்படுகின்றது.இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள பிரியா தியேட்டரில் லியோ படம் திரையிடப்பட்டது. அப்போது லியோ படத்தின் சத்தம் இல்லாதால் ரசிகர்கள் சண்டை போட ஆரம்பித்துள்ளனர்.


இதனால் என்னை செய்வது என்று தெரியாமல் திரையரங்க நிர்வாகிகள் லியோ படத்திற்கு பதிலாக ஜில்லா படம் போட்டு இருக்கிறார்கள்.இதுக்கு கடுப்பான விஜய் ரசிகர்கள் லியோ படத்தை போடுமாறு எழுந்து சென்று சத்தம் போட்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி உள்ளதாக ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.  

Advertisement

Advertisement