இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் ஏ.ஆர்.ரகுமான்.
இப்படத்தினைத் தொடர்ந்து ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராகவும் வலம் வருகின்றார். அத்தோடு கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்ற ஏ.ஆர் ரகுமான் ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதையும் பெற்றார்.
கிட்டதட்ட 30 ஆண்டுகளாக தான் இசையமைத்த அனைத்து பாடல்களையும் ஹிட் பாடல்களாக கொடுத்து வரும் ஏ.ஆர்.ரகுமானுக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வரிசையில் பாடகி சுவேதாவும் ஒருவர் என்று தான் கூற வேண்டும்.
இந்நிலையில் இவர் பதிவேற்றிய பதிவு ஒன்று ரசிகர்களிடத்தே வைரைலாகி வருகின்றது.அதாவது ஜூலை 17ம் தேதி முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை உலக சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் ஏ.ஆர்.ரகுமான் . உலக நாடு முழுக்க தொடர்ச்சியாக இசை நிகழ்ச்சி நடத்துகிறார். இதற்கிடையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி, துபாய் எக்ஸ்போ, கேன்ஸ் பட விழா, பார்த்திபன் படம் என பம்பரமாக சுற்றி வருகிறார்.
இதனால் ஏ.ஆர்.ரகுமானின் தீவிர ரசிகையும் அவர் குழுவில் பாடி வருபவருமான பாடகி ஸ்வேதா மோகன், 'தயவு செய்து உங்கள் உடல் நலத்தை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். தேவையான நேரத்திற்கு தூங்குங்கள்" என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள ஏ.ஆர்.ரகுமான் 'கண்டிப்பாக முயற்சி செய்கிறேன், என் மீது அக்கறை காட்டியதற்கு நன்றி' என்று தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- இயக்குநர் லோகேஷிற்கு கமல் கொடுத்த பரிசு-வாயடைத்துப்போன ரசிகர்கள்..தீயாய் பரவும் புகைப்படம்..!
- இந்தியன் -2 பற்றி சூப்பர் அப்டேட் கொடுத்த பிரபல நடிகர்..எதிர் பார்ப்பில் ரசிகர்கள்..!
- விக்ரம் அடுத்த பாகத்தில் சூர்யாவா..? ஐந்து மொழிகளிலும் கமல் வெளியிட்ட வீடியோ..!
- இந்த கறுப்பு நிற உடை மட்டும் இத்தனை இலட்சமா-பிரியங்கா சோப்ராவை வியந்து பார்க்கும் ரசிகர்கள்..!
- கோபி பிரச்சனைக்கு அம்மா சொன்ன தீர்வு..குழப்பத்தில் ராதிகா – பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!