• Sep 21 2024

காபி அடிச்சாலும் யாருக்கும் தெரியாத மாதிரி அடிக்கணும்-யுவன் மற்றும் வெங்கட் பிரபு சொன்ன ரகசிய கதை

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அரவிந்தன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் யுவன் சங்கர் ராஜா.இப்படத்தைத் தொடர்ந்து வெல்லாம் கேட்டுப்பார், உனக்காக எல்லாம் உனக்காக, ரிஷி, தீனா, துள்ளுவதோ இளமை, நந்தா என்று ஆரம்ப காலத்திலேயே பல வெற்றி படங்களை கொடுத்தார்.

இது தவிர ஏப்ரல் மாதத்தில், மௌனம் பேசியதே, காதல் கொண்டேன், பேரழகன், 7/ஜி ரெயின்போ காலனி என்று பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.இவர் தனது அப்பாவான இளையராஜாவின் பாடலை மையமாக வைத்து தான் இசையமைத்த பாடலைப் பற்றி கூறியுள்ளார்

90களில் இருந்து இன்று வரை முன்னணி இசையமைப்பாளராக இருந்து வரும் யுவன் அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என்று இவர் பல முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்துள்ளார்.இந்நிலையில் வெங்கட் பிரபு எழுதி, இயக்கிய சென்னை 600028 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடலைப் பற்றியும், பாடல் உருவான கதையை பற்றியும் வெங்கட் பிரபு மற்றும் யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளனர்.

சென்னை 600028 படத்தில் ஜெய், சிவா, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், நிதின் சத்யா, விஜயலட்சுமி போன்ற பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள "யாரோ யாருக்குள் இனி யாரோ" என்ற பாடல் தன் அப்பா இளையராஜாவின் பாடலில் இருந்து எடுக்கப்பட்ட டியூன் தான் என்று கூறியுள்ளார்

1982 ஆம் ஆண்டு கங்கை அமரன் எழுதி, இயக்கிய திரைப்படமான கோழி கூவுது படத்தில் இடம்பெற்ற "ஏதோ மோகம், ஏதோ தாகம்" பாட்டிலிருந்து எடுக்கப்பட்ட டியூன் தான் "யாரோ யாருக்குள் இனி யாரோ" என்ற பாடலுக்கு பயன்படுத்தியதாக கூறியுள்ளார். மேலும் இவர்கள் கூறிய விஷயம் தான் ஹை லைட்"காபி அடிச்சாலும் யாருக்கும் தெரியாத மாதிரி அடிக்கணும்" என்று இருவரும் கூறியது அனைவரையும் வெகுவாக கவர்ந்துந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement