• Sep 20 2024

வைகைப் புயல் வடிவேலுவுடன் ஒரு பாடல்- ஏ.ஆர் ரகுமான் கொடுத்த சூப்பர் அப்டேட்- என்ன படத்திற்கு தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

உலக அரங்கில் இசை சக்கரவர்த்தியாக திகழ்பவர் ஏ.ஆர்.ரகுமான். அவர் வாங்கிய இரண்டு ஆஸ்கர் விருதுகள் உலக நாடுகள் அனைத்தையும் இந்தியாவை நோக்கி திரும்பி பார்க்க வைத்தது. ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என ஒட்டுமொத்த திரையுலகையும் இசையால் கட்டிப்போட்டுள்ளார்.

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரின் இசையில் உருவாகிய பொன்னியின் செல்வன் 2, பத்து தல ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.


ஏ.ஆர்.ரஹ்மான் தனது பாடல்களில் எப்போதும் ஏதேனும் ஒரு புதுமையை புகுத்தும் வழக்கம் உடையவர். சமீபத்தில் அவர் இசையமைத்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில்கூட பழங்கால கருவிகளை கொண்டு இசையமைத்தார். 


இந்த நிலையில் உதயநிதி நடித்த வரும் மாமன்னன் திரைப்படத்திற்கு இசையமைத்து வருகின்றார். அந்த வகையில் வடிவேலுவுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement