• Sep 20 2024

வெந்து தணிந்தது காடு படத்திற்காக நடைபெறும் வித்தியாசமான ப்ரமோஷன்- தமிழகம் முழுவதும் சுற்றும் 'THEME பஸ்.

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் கௌதம் வாசு தேவன் இயக்கத்தில் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் சிம்பு நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக  குஜராத் மாநிலத்தை சேர்ந்த நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார்.

மேலும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இப்படத்தின் தமிழக உரிமையைப் பெற்றுள்ளது. இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தின் ப்ரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகின்றது.


அந்த வகையில் படத்தின் ரிலீஸை ஒட்டி படத்தயாரிப்பு நிறுவனம் பிரத்யேக பேருந்தை வெந்து தணிந்தது காடு படத்தின் தீம்மை மையமாக வைத்து வடிவமைப்பு செய்து தமிழகம் முழுவதும் சுற்றிவர வைத்துள்ளனர். 

இந்த பேருந்தை இயக்குநர் கௌதம் மேனன் & தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இருவரும் இணைந்து ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர். பேருந்தினுள் வெந்து தணிந்தது காடு படத்திற்காக பயன்படுத்திய பொருட்கள் குறிப்பாக டிராவல் பேக், இசக்கி புரோட்டா, சைக்கிள், வயர் கூடை, தொரத்தி கம்பு, தலையணை ஆகியவை உள்ளன.


'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு கதாநாயகனாக 'முத்து' எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார். சிம்புவின் அம்மாவாக ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement