வளர்ச்சிக்குப் பணம் ஒரு தடையல்ல என வாழ்ந்து காட்டியவரே நடிகர் அஜித். அதாவது இவர் தமிழ் சினிமாவில் எந்தவித பின்புலமும் இன்றியே நுழைந்திருந்தார். இவரது வாழ்க்கைப் பயணத்தின் ஆரம்பத்தில் இவர் ஒரு பைக் மெக்கானியாகவே இருந்தார். இவர் அதிகம் படித்தவருமல்ல. இதனாலேயே எந்த நிகழ்வாயினும் சரி, விழாக்களாயினும் சரி அங்கு பேசுகையில் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி வருகின்றார்.
தமிழ் சினிமாத் திரையுலகில் 'அமராவதி' என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியிருந்த அஜித்திற்கு, அதனைத் தொடர்ந்து அவர் நடித்த 'பவித்ரா, ஆசை, காதல் கோட்டை, காதல் மன்னன், அவள் வருவாளா, வாலி' என அனைத்துப் படங்களும் அடுத்தடுத்து ஹிட் படங்களாக மாறி வெற்றியைப் பெற்றுக் கொடுத்தன.
இவரின் இந்தப் பாரிய வெற்றிக்கு காரணம் அவரின் கடின உழைப்பே. அதாவது தனது தன்னம்பிக்கையாலும், விடா முயற்சியாலும் உயர்ந்து மக்கள் மனதில் நீங்காத ஒரு இடத்தைப் பிடித்து 'தல' என ரசிகர்களால் சிறப்பாக அழைக்கப்பட்டார். இவருக்கென தமிழ் நாட்டில் மட்டுமில்லாது உலகமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
இவ்வாறாக அன்று முதல் இன்றுவரை ஓய்வில்லாமல் பல படங்களிலும் நடித்து வருகின்ற அஜித் 'அமர்க்களம்' என்ற படத்தில் நடிகை ஷாலினியோடு இணைந்து நடித்தபோது அவர் மீது காதல் வயப்பட்டார். இப்படம் வெளியாகி எப்படி வெற்றி பெற்றதோ அதேபோன்று இவர்களது காதலும் சக்சஸ் ஆனது. இதையடுத்து இவர்கள் இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு தற்போது ஒரு மகனும் மகளும் உள்ளனர்.
திருமணத்தைத் தொடர்ந்து ஷாலினி படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தாலும், அஜித் தொடர்ந்தும் நடித்த வண்ணமே வருகிறார். இவர் ஒரு நடிகராக மட்டுமின்றி கார் ரேஸர், பைக் ரேஸர், துப்பாக்கு சுடும் வீரர் என பன்முகத்திறமை கொண்டவராகவும் மக்கள் மத்தியில் விளங்கி வருகிறார்.
இந்த நிலையில் நம்ம தல சினிமாவில் காலடி எடுத்து வைத்து தற்போது 30 ஆண்டுகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக புதுச்சேரியை சேர்ந்த அஜித் ரசிகர்கள் வித்தியாசமான முயற்சி ஒன்றினை யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மேற்கொண்டுள்ளனர்.
Welcoming #AjithKumar sir #30YearsOfAJITHISM in a grand manner🥳
— French City AJITH Fans - PUDUCHERRY (@AjithFCPudhuvai) August 5, 2022
100ft below under the sea water 🌊
NOTE:Do not try this ⚠️
Risky stunt ❌
Only the special trained person is permissible under the sea 👍@TrendsAjith@TFC_mass @Thalafansml @Dharsha_AK @ItsMeKillerXD @its__vignesh pic.twitter.com/LenulfkskG
அதாவது கடலுக்கடியில் 100 அடி ஆழத்தில் நடிகர் அஜித்தின் பேனரை வைத்து கெத்து காட்டி உள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- டிடிக்கு இப்படி ஒரு சகோதரர் இருக்காரா..? பார்ப்பதற்கு ஹீரோ போல இருக்காரே…வெளியான புகைப்படம்..!
- ஆண் வேடத்தில் அட்டகாசம் செய்யும் ஜெனிலியா…படம் பிடித்த கணவர்…வைரலாகும் வீடியோ பதிவு..!
- “எங்களுக்காக நிர்வாணமாக நடியுங்கள்”..ரன்வீரிடம் கோரிக்கை விடுத்த முக்கிய அமைப்பு…கிளம்பும் எதிர்ப்புகள்.!
- “சிவகார்த்திகேயனை யார் என்றே தெரியாது”…மிஸ்கின் கூறிய பதில்…விமர்சிக்கும் ரசிகர்கள்..!
- இந்தப் படத்தை தனுஷ் தவற விட்டிருக்காரா..? வருந்தும் ரசிகர்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!