தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவர் ஒரு படத்தில் நடிக்க வேண்டுமாயின் அந்தப் படத்திற்காக தனது உடலையும் வருத்திக் கொள்ளும் துணிச்சலான நடிகரும் ஆவார். இவ்வாறாக எந்த கதாபாத்திரத்தையும் துணிந்து ஏற்கும் இயல்பு கொண்டவர். தற்போது இவரது நடிப்பில் சியான் 60 என்னும் ‘கோப்ரா’ என்ற திரைப்படம் உருவாகி வருகின்றது.
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படங்கள் வெளிவர தயாராக இருக்கும் நிலையில் தற்போது விக்ரம் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்க இருக்கும் “சியான் 61” என்று தற்காலிகமாக பெயர் வைத்திருக்கும் இப்படத்தில் நடிக்க உள்ளார்.
மேலும் இந்த சியான் 61 படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இயக்குநர் பா.ரஞ்சித்தின் இயக்கிக் கொண்டிருந்த ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படம் தற்போது திரைக்கு வர தயாராக உள்ளதால் தற்போது பா.ரஞ்சித் விக்ரமின் சியான் 61 படத்தை விரைவில் இயக்கவுள்ளார்.
அதாவது இப்படத்தின் படப்பிடிப்பு ஓரிரு நாட்களில் சென்னையில் பூஜையுடன் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை பொங்கலன்று ரிலீஸ் செய்யப் போவதாகவும் தகவல் பரவி வருகிறது. இதற்கான அதிகாரவூர்வமான தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!