• Sep 20 2024

நடிகை மீனாவுக்கு அவரது தோழிகள் கொடுத்த சர்ப்ரைஸ்- பிறந்தநாளுக்கு இத்தனை பேர் போயிருக்கிறாங்களா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில்... முன்னணி நடிகர்களாக இருந்த, ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், அர்ஜுன், அஜித் என பெரும்பாலான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் மீனா. குந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தார்.


தமிழ் திரையுலகில் மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம், போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.வித்யாசாகர் என்பவரைத் திருமணம் முடித்த இவருக்கு நைனிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது. நைனிகா தெறி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார்.


மேலும் மீனா கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார்.இந் நிலையில் அண்மையில் இவரது கணவர் நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்ததோடு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கணவனின் இழப்பில் இருந்து வெளி வராமல் இருக்கும் மீனாவை அவரது தோழிகள் அடிக்கடி சந்தித்து வருகின்றனர்.இந்த நிலையில்  மீனா தன்னுடைய 46 ஆவது பிறந்தநாளை நேற்று கொண்டாடிய நிலையில், தன்னுடைய தோழிகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.


இதில் நடிகை சினேகாவின் சகோதரி, பிரசன்னாவின் சகோதரி, ப்ரீத்தா ஹரி, வந்தனா ஸ்ரீகாந்த் போன்ற பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்களும் மீனாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 




Advertisement

Advertisement