திரையுலகில் எத்தனை உலக அழகிகள் வந்தாலும் நம் மனதில் நீங்காத இடம்பிடித்திருப்பவர் என்றால் அது ஐஸ்வர்யா ராய் தான். தமிழ் சினிமாவில் 'இருவர், ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், எந்திரன்' போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது இவர் கடந்த செப்டம்பர் மாதம் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' என்ற படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து பல கோடி ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொண்டிருக்கின்றார்.
அத்தோடு இந்தி சினிமாவில் இவர் பிரபல முன்னணி நடிகையாகவும் இருக்கிறார். மேலும் இந்தி நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. குடும்பத்துடன் சந்தோசமாக தனது பொழுதைக் கழித்து வருகின்றார்.
இந்நிலையில் தான் தற்போது மராட்டிய மாநில நில வருவாய் துறை ஐஸ்வர்யா ராய்க்கு நோட்டீஸ் ஒன்றினை அனுப்பி உள்ளது. அதாவது நாசிக் மாவட்டத்தில் உள்ள சின்னாரில் ஐஸ்வர்யா ராய்க்கு ஒரு ஹெக்டேர் நிலம் உள்ளது. இதற்கு ஓராண்டாக நில வரி ரூ.21 ஆயிரத்து 960 செலுத்தவில்லை என்றும், பல தடவை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பியும் வரியை செலுத்தாததால் ஐஸ்வர்யா ராய்க்கு சின்னார் தாசில்தார் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அத்தோடு 10 நாட்களுக்குள் நில வரியை செலுத்தாவிட்டால் ஐஸ்வர்யா ராய் மீது நில வருவாய் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஐஸ்வர்யா ராய்க்கு மட்டுமல்லாது இதுபோல் அங்கு நிலம் இருந்து வரி செலுத்தாத மேலும் 1200 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
எது எவ்வாறாயினும் கோடி கோடியாய் பணம் சம்பாதிக்கும் பிரபல நடிகை ஒருவர் நில வரி செலுத்தாது இருந்துள்ளமை அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!