நடிகர் சிம்பு தற்பொழுது வெந்து தணிந்தது காடு என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 15 ம் தேதி இந்த படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து டைரக்டர் ஓப்லி எம் கிருஷ்ணா இயக்கும் பத்து தல படத்தில் நடித்து வருகிறார்.
இது கன்னட படமான முஃப்தி படத்தின் தமிழ் ரீமேக்காகும். இப்படத்தின் ஷீட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை தனது தந்தை டி.ராஜேந்தரின் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதால் பத்து தல படத்தின் வேலைகளை பாதியில் நிறுத்தினார்
டி.ராஜேந்தர் குணமடைந்து சென்னை திரும்பியதை அடுத்து மற்ற நடிகர்கள் நடித்த சீன்களை எடுத்து வந்தார் டைரக்டர். தற்போது சிம்பு நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.
அந்த வகையில் இன்று முதல் பத்து தல படத்தின் வேலைகளை சிம்பு ஆரம்பித்துள்ளார். லேட்டஸ்ட் தகவலின் படி, கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள மைசூரு அரண்மனையில் இன்று ஷுட்டிங் துவங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதே இடத்தில் தான் லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 படத்தின் ஷுட்டிங்கும் நடக்கிறது. இதனால் பத்து தல , சந்திரமுகி 2 டீமிலும் உள்ள நடிகர் நடிகைகள் சந்தித்து கொள்வதற்கான வாய்ப்பும் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- விஜய்டிவியின் முக்கிய சீரியலில் கமிட்டான கோகுலத்தில் சீதை தொடரின் கதாநாயகன்- அடடே இந்த நடிகரா?
- படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தால் படுகாயம் அடைந்த கோமாளி பட நடிகை
- போதையில் காரை அதிவேகமாக ஓட்டிய நடிகை- பதுங்கி இருந்து மடக்கிப் பிடித்த போலீஸார்- பாலியல் தொழிலும் செய்தவரா இவர்
- குடும்பத்தினருடன் இலை சாப்பாடு- தனுஷ் மற்றும் செல்வராகவனுடன் குக்வித் கோமாளி வித்யுலேகா
- இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தனுஷ் சார்- அண்ணன் தம்பி பாசத்தை மீண்டும் தொடங்கிய சிவகார்த்திகேயன்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!