• Sep 21 2024

வெற்றியின் கழுத்தில் வைக்கப்பட்ட துப்பாக்கி... அபியை தர தரவென இழுத்துச் சென்ற அதிகாரிகள்... விறுவிறுப்பான ப்ரோமோ வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் 'தென்றல் வந்து என்னைத் தொடும்'. மற்ற சீரியல்களை போலவே இந்த சீரியலும் அதிரடித் திருப்பங்களோடு அட்டகாசமாக சென்று கொண்டிருக்கின்றது. 

இந்நிலையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் வெற்றியும் அபியும் ஒரு தீவின் கரையில் ஒதுங்கி ஆழ்ந்த தூக்கத்தில் உள்ளனர். 


அந்த சமயத்தில் அபி ஒரு கனவு கண்டு பயத்தில் கத்துகின்றார். அதாவது அபியையும் வெற்றியையும் நேவி அதிகாரிகள் துப்பாக்கியுடன் இழுத்து செல்வது போன்று அந்த கனவு அமைந்திருந்தது. பின்னர் வெற்றி அபியிடம் கனவா எனக் கேட்கின்றார்.


இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.


Advertisement

Advertisement