• Nov 17 2024

வருங்காலக் கணவரின் கை பிடித்து... மணக்கோலத்தில் வலம் வரும் ஹன்ஷிகா... வெளியானது வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்ஷிகா தற்போது திருமண பந்தத்தில் இணைய இருக்கின்றார். அந்தவகையில் இவரின் திருமணம் டிசம்பர் 4 ஆம் தேதி (நாளை) பிரமாண்டமாக நடைபெற உள்ளது. 

அதாவது ஹன்சிகா தன்னுடைய நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னரும், மற்றும் தோழியின் முன்னாள் கணவருமான சோஹைல் கதுரியா என்பவரைத் தான் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.


இந்நிலையில் இவர்களுடைய திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள 450 வருடம் பழமை வாய்ந்த முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் மிகப் பிரமாண்டமாக நடக்க உள்ளது. இதைத்தொடர்ந்து இவருடைய திருமண சடங்குகள் தற்போது கோலாகலமாக ஆரம்பமாகி உள்ளது. 


ஏற்கனவே கடந்த மாதம் 22 ஆம் தேதி, ஹன்சிகா மற்றும் சோஹைல் கதுரியா இருவருக்கும் மாதா கி சோகி என்கிற சடங்கு நடந்த போது, ஹன்சிகா மற்றும் மணமகன் ஆகிய சோஹைல் கதுரியா இருவரும் சிகப்பு நிற உடையில் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. 


ஹன்சிகா மணமகள் கோலத்தில் அழகு தேவதை போல் மின்னும் வீடியோ ஒன்றை சோஹைல் கதுரியா வெளியிட்டுள்ளார். இதில் அவர் தனது வருங்காலக் கணவரின் கை கோர்த்து மிகவும் அழகாக நடந்து வருகின்றார். 

இந்த வீடியோவைத் தற்போது ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருவதோடு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். 


Advertisement

Advertisement