தமிழகத்தின் முன்னணி பொழுதுபோக்கு தொலைக்காட்சியகளில் ஒன்று விஜய் டீவி. இதில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளைக் கடந்து அதில் பங்கேற்கும் கலைஞர்கள் மற்றும் தொகுப்பாளர்களுக்கு தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதுமட்டுமன்றி 'ஸ்டார்' என்ற அந்தஸ்தில் இருக்கும் அவர்களின் நிகழ்ச்சிகளை அவர்களுக்காகவே பார்க்கும் ரசிகர்கள் பட்டாளமும் இருக்கிறது.
இவ்வாறான விஜய் தொலைக்காட்சியின் பிரபல முகமாக மாறியிருப்பவர் தொகுப்பாளினி பிரியங்கா. இவர் 'சூப்பர் சிங்கர்' மற்றும் 'கலக்கப்போவது யாரு' உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கின்றார். அதுமட்டுமன்றி காமெடி, கலாட்டா மற்றும் அலப்பறைகளை செய்து தனக்கென தனியான ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.
இவர் தொலைக்காட்சியைக் கடந்து யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார். சத்தமான சிரிப்புடன் கிண்டல் கேலிகளை செய்யும் இவர் மற்றவர்கள் தன்னை கிண்டல் செய்வதையும் ஜாலியாக எடுத்து பல்லாயிரக்கணக்கான மக்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.
இவ்வாறாக எப்போதுமே ஜாலியாக இருக்கிற இவர் வெளிநாட்டில் நடக்கும் கலை நிகழ்ச்சிக்கு செல்வது வழக்கம். அப்படி நிறைய நிகழ்ச்சிகளுக்காக ஊர் ஊராக சுற்றியிருக்கிறார். இந்நிலையில் தற்போது பிரியங்கா கனடா சென்றிருக்கின்றார். தனிப்பட்ட முறையில் கனடா சென்றாரா அல்லது தொலைக்காட்சி மூலம் பயணமா என்பது தெளிவாக தெரியவில்லை.
அங்கு சென்ற அவர் நடுரோட்டில் செம குத்தாட்டம் போட்டிருக்கின்றார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவ்வீடியோவை வைரலாக்கி வருவதோடு மட்டுமல்லாமல் அவரைக் கேலி செய்தும் வருகின்றனர்.
Listen News!