• Sep 20 2024

குழந்தையுடன் குத்தாட்டம் போட்ட நந்திதா... அதுவும் பாவாடை தாவணியிலா.. வைரலாகும் வீடியோ பதிவு..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகில் வளர்ந்து வரும் பெண் நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இவர் தமிழ், கன்னடம் போன்ற மொழிப் படங்களில் நடித்து வருகின்றார். மேலும் இவர் 'அட்டகத்தி' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார். 


அதனைத் தொடர்ந்து 'எதிர்நீச்சல்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் மூலமே மக்கள் மத்தியில் பிரபலமானார். அதுமட்டுமல்லாது ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற திரைப்படத்தில் நடித்த குமுதா என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. 



அத்தோடு 'நந்தா லவ்சு நந்தினி' என்ற திரைப்படத்தின் வழியாக கன்னடத் திரையுலகிற்குள்ளும் அறிமுகமானார். மேலும் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சம் மறப்பத்தில்லை’ என்ற படத்திலும் இவர் நடித்திருக்கின்றார்.


இதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும், வேறு சில படங்களில் சிறப்புத் தோற்றத்திலும் தனது நடிப்பினை வெளிப்படுத்தி இருக்கின்றார். இவர் சினிமாவில் மட்டுமன்றி சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கின்ற ஒருவர். அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றி வருவார்.


இந்த நிலையில் இவர் தற்போதும் ஒரு சிறுமியுடன் இணைந்து ஒரு  பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கின்றார். அதனை தனது இன்ஸ்டா பக்கத்திலும் பதிவிட்டிருக்கின்றார். இதனைப் பார்த்த நந்திதா ரசிகர்கள் அந்த வீடியோவினை அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement