தமிழ்த் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன். இவர் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும் நடிகையுமான மகாலட்சுமி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
இருப்பினும் இவர்கள் இருவர் குறித்தும் பல எதிர்மறையான விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் அடுக்கடுக்காய் வெளிவந்திருந்தன. ஆனால் இவர்களோ அவை எவற்றையுமே பொருட்படுத்தாது சந்தோசமாகக் குடும்பம் நடாத்தி வருகின்றார்கள்.
அந்தவகையில் இவர் தற்போது விஜய்யின் வாரிசு படத்தில் சிம்பு பாடியிருந்த தீ தளபதி பாடலுக்கு கம்பீரமாக ஒரு ரியாக்ஷன் கொடுத்து அதனை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் கமெண்டுகளின் வாயிலாக அவரைக் கலாய்த்து வருகின்றனர்.
Listen News!