• Nov 19 2024

மகன் இல்லாத நேரத்தில் மாமியாரை மிரட்டும் தனலட்சுமி... ஓ மருமகள் கொடுமையா... வெளியானது வீடியோ ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசனில் கலந்து கொண்டு பலராலும் அறியப்பட்ட ஒருவரே தனலட்சுமி. போட்டியாளர்கள் ஒவ்வொருவருடைய சொந்தக் கதையை கேட்டு விட்டு எல்லாருமே அமைதியாக இருந்து விட்டு பின்னர் ஒப்பாரி வைச்சது என்றால் அது தனலட்சுமியோட கதை கேட்டுத்தான். 


பிக்பாஸ் வீட்டில் இவர் எப்போதுமே மற்றவர்களுடன் சண்டை போடுவதையே வழக்கமாக வைத்துள்ளார். இதனால் இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் ரசிகர்களின் எண்ணிக்கையை விட இவரை விமர்சிக்கும் ரசிகர்களே அதிகமாக இருக்கின்றார்கள். 

கமல் வாராவாரம் இவருக்கு பல அட்வைஸ் கூறியும் இவர் திருந்துவது போல் இல்லை. எதையாவது புரளி பேசுவது, இல்லாவிட்டால் யாரோடாவது சண்டை போடுவது இதையே பின்பற்றி வருகின்றார். அதுமட்டுமல்லாது கொஞ்சம் கூட யோசிக்கமால் மற்றவர்களை வார்த்தைகளாலும் புண்படுத்தி வருகின்றார். இவ்வாறான தனலட்சுமி டிக்டாக் செய்வதில் சிறந்தவராக விளங்குகின்றார்.


அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முதல் இவர் டிக்டாக் மூலமாகவே ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபல்யமானார். டிக்டாக்கில் இவரை எல்லோருமே சுகி என்று தான் அழைப்பார்கள். அந்தவகையில் சமீபகாலமாக இவரின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிய வண்ணம் தான் இருக்கின்றன.

இந்நிலையில் தற்போதும் மருமகள் கொடுமை என்பது எப்படி இருக்கும் என்பதை வைத்து இவரின் வீடியோக்கள் வெளியாகி இருக்கின்றன. அதாவது இவர் மகன் இல்லாத நேரத்தில் மாமியாரை வெருட்டுகின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு மருமகள் யாருக்கு வேணும் எனக் கிண்டலாக கேட்டு அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.


Advertisement

Advertisement