அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 95-ஆவது ஆஸ்கர் விருது விழாவில் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் சாங் பாடலுக்கான ஆஸ்கர் விருதையும், யானைகளை பராமரிக்கும் முதுமலை தம்பதிகளும், அவர்கள் பராமரிக்கும் யானைகள் பற்றிய ஆவணப்படமான 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' படமமானது சிறந்த ஆவணபடத்திற்கான ஆஸ்கர் விருதையும் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது.
இந்த நிலையில் சிறந்த ஆவண குறும்படத்தின் வாயிலாக தங்களை பிரதிபலித்துக் கொண்ட முதுமலை தம்பதிகளான பொம்மன் மற்றும் பெள்ளி இருவரும் இன்று சென்னை, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அவரின் வாழ்த்துக்களை பெற்றனர்.
யானைகளை பராமரிக்கும் யானை பராமரிப்பாளர் தம்பதிகளான பொம்மன் – பெள்ளியம்மா ஆகியோரை நேரில் வாழ்த்திய முதலமைச்சர் இருவருக்கும் கேடயங்களையும், சான்றிதழ்களையும் வழங்கியதோடு மட்டுமல்லாமல், பொன்னாடை போர்த்தி இருவரையும் கௌரவப்படுத்தியும் உள்ளார்.
மேலும் முதலமைச்சர்கள் இவர்களை வாழ்த்தியபோது அருகில் தலைமை செயலாளர் வெ. இறையன்பு, அமைச்சர் மதிவேந்தன் உள்பட பலர் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ ஆனது தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகின்றது.
TamilNadu CM @mkstalin meets #ElephantWhisperer Couple at Secaratraiat pic.twitter.com/8zoRk4T9k9
Listen News!