நடிகர் விஜய்யின் லியோ படம் கடந்த 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அடுத்தடுத்து வாரயிறுதி மற்றும் விடுமுறை கொண்டாட்டங்களை அடுத்து இந்தப் படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் அமைந்து வருகிறது. மேலும் அடுத்த வாரத்திலும் படத்திற்கு மிகப்பெரிய அளவில் போட்டிப் படங்கள் எதுவும் வெளியாகாததால் படம் மேலும் அதிகமான கலெக்ஷனை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லோகேஷ் -விஜய் கூட்டணியில் வெளியான இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான நிலையில் இரண்டாவது பாதி ரசிகர்களை கவர தவறியுள்ளது. இதனால் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் கடந்த 5 நாட்களில் படத்தின் வசூல் சர்வதேச அளவில் 475 கோடி ரூபாய்களை தாண்டியுள்ளது.
இந்த மாதத்தின் முதல் வாரத்திலேயே தன்னுடைய அடுத்தப்படமான தளபதி 68 படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார் விஜய். இந்தப் படத்தின் சூட்டிங் பூஜையுடன் துவங்கிய நிலையில், கடந்த 15 நாட்களில் படத்தின் பாடல் காட்சிகள் மற்றும் ஆக்ஷன் காட்சிகளை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தின் அப்பா, மகன் என இருவேறு கேரக்டர்களில் விஜய் நடிக்கவுள்ள நிலையில் படத்தில் மகன் விஜய்யை யூத்தாக காண்பிக்க டி ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.இப்படத்தில் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் நடித்து வருகின்றனர்.
அந்த வகையில் இப்படத்தில் நடிகை லைலாவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.21 வருடங்களுக்கு முன் உன்னை நினைத்து படத்தில் முதலில் விஜய் மற்றும் லைலா தான் நடித்தனர். ஆனால் இயக்குநர் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விஜய் பாதியில் விலகிவிட்டார். அதன் பிறகு சூர்யாவை வைத்து அந்த படத்தை எடுத்தனர்.
"என்னிடம் இருந்து தப்பி சென்ற நடிகர்" என அப்போது எடுத்த போட்டோவை நடிகை லைலா பகிர்ந்து இருந்தார். அதனை தொடர்ந்து தான் தற்போது தளபதி68ல் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்து இருக்கிறது. இதனால் நன்றி தெரிவித்து லைலா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!