தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் அமீர் இயக்கத்தில் வெளியான 'பருத்தி வீரன்' படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார்.இதனை தொடர்ந்து அவர் நடித்த பல்வேறு திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ஹிட் அடித்தன.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தியின் நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதனையடுத்து இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.இப்படத்தில் இவருடைய கதாப்பாத்திரம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்தது.
அதேபோல, PS.மித்ரன் இயக்கத்தில் வெளியான சர்தார் படத்திலும் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த விருமன் படத்திலும் நடித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து ஜப்பான் என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தினை இயக்குநர் ராஜூ முருகன் இயக்கி வருகிறார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்தப் படம் நடிகர் கார்த்தியின் 25வது படமாக உருவாக உள்ளது.கடந்த ஆண்டு தன்னுடைய திரைவாழ்வில் சிறந்த ஆண்டாக அமைந்ததாகவும் நடிகர் கார்த்தி தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் நடிகர் திரையுலக வாழ்வில் நுழைந்து 16 வருடங்கள் நிறைவுபெறுவதை முன்னிட்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் Common DP யை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில்,"நடிகர் கார்த்தி திரையுலகிற்குள் வந்து 16 ஆண்டுகள் நிறைவுபெறுவதை முன்னிட்டு Common DP யை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தரமான பொழுதுபோக்கு மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் படங்களை கொடுத்ததற்கு நன்றி. தொடர்ந்து எங்களுக்கு உத்வேகமாக இருங்கள் சார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதனுடன் 16 வருட திரை வாழ்வில் நடிகர் கார்த்தி ஏற்று நடித்திருந்த கதாப்பாத்திரங்களின் கெட்டப் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்நிலையில் இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
Glad to unveil the common DP of #16YearsofKarthiism and wishing @Karthi_Offl sir on successfully completing 16 years in the industry by delivering quality entertainers and hard-hitting films! Keep inspiring us sir🔥 pic.twitter.com/LMClXTDjlx
Listen News!