தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு நல் உள்ளம் படைத்த மனிதன் என்றால் அது மயில்சாமி தான். பிரபல காமெடி நடிகராக வலம் வந்த இவரது மரணம் இன்றுவரை பலராலும் ஏற்க முடியாத ஒன்றாகவே இருக்கின்றது. இதனால் பலரும் மயில்சாமியுடன் இருந்த தங்களது அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குநர் பி.வாசுவும் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் தனக்கும் மயில்சாமிக்கும் இடையிலான உறவு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது "நான் எப்ப வெளிய போனாலும் மயில்சாமி வந்து 'எப்ப சார் ப்ரோகிராம்?, எப்ப சார் திரும்பி வருவீங்க? இதைக் கேட்காமல் இருக்க மாட்டான்.
இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக என் வீட்டிற்கு வந்திருந்தார், அவனை வீட்டிற்கு வர சொல்லி கூப்பிட்டதும் நான் தான். அவரிடம் நான் 'மயில் உன் உடம்பை பார்த்துக்கோ, எல்லாரும் இதை சொல்ல மாட்டாங்க, நான் இதை உனக்கு சொல்றேன், எல்லாத்தையும் நீ விளையாட்டாக எடுக்காதை" என்று எல்லாம் சொன்னேன்.'
ஆனால் அதற்கு மயில்சாமியோ அதெல்லாம் ஒண்ணும் இல்லை சார், அதையெல்லாம் விடுங்க" என்று அதையும் காமெடியாகவே சொன்னான்.
கடைசி நேரத்தில அவனை என்னால பார்க்க முடியல, நான் மயில்சாமியை ரொம்பவே திட்டிற்றேன். "ஏன் என்னை பார்க்க விடல, என்னால உன்னை பார்க்க முடியாமல் போய்ற்றே, ஒருவேளை நினச்சியோ நான் உன்னை பார்க்க கூடாதுன்னு" அப்படி என்று கடந்த சில நாட்களாக எனக்குள்ளேயே மிகப்பெரிய ஒரு போராட்டம் இருந்திச்சு" எனக் கூறியுள்ளார்.
மேலும் "மயில்சாமிகிட்ட இதை உன்னால பண்ண முடியாது என்று கூறினால் அதை பண்ணிட்டு தான் அவன் அடுத்த வேலை பார்ப்பான். உதாரணமாக கவர்னர் ஐ பார்க்க உன்னால் முடியாது என்று கூறினால் அவன் எப்பிடியாவது கவர்னரை பார்த்துத் தான் ஆவான். அந்த ஒரு திறமை மயில்சாமியிடம் இருக்கு.
மயில்சாமி எப்பவுமே என் கூட இருக்கணும் என்ற ஈர்ப்புக் கூட எனக்குள்ள இருந்திருக்கு, எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும். நானும் பாரதியும் தனித்தனியாக படம் பண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் கூட நான் மயில்சாமியை என் கூடவே இருக்குமாறு கூறி இருக்கேன். எனக்கு மட்டுமில்லை. ஒரு கிராமத்திற்கு போனால் அந்தக் கிராமமே அவரை ஒரு பிள்ளையாக தான் பார்க்கும். அந்தளவிற்கு எல்லாரையுமே உறவு முறை வைத்துத் தான் கூப்பிடுவார்.
இதுவரைக்குமே மயில்சாமி எனக்குப் போன் பண்ணி நான் அவன் கால் ஐ மிஸ் பண்ணினது கிடையாது. அப்பிடி மிஸ் பண்ணினாலும் நான் அவங்களை திரும்பப் கூப்பிடிட்டிடுவேன், அவன் பேசினால் கூடி வேஸ்ட் ஆன விஷயங்கள் பற்றி பேசினதே இல்லை" எனவும் கூறி இருக்கின்றார்.
அதுமட்டுமல்லாது "இதுவரைக்கும் இறந்த நடிகர்கள், காமெடி நடிகர்கள் என எல்லாரையும் விட மயில்சாமியைப் பற்றித்தான் இந்த உலகம் அதிகமாக பேசியிருக்கின்றது. அந்தளவுக்கு ஒரு நல்ல பெயரை அவன் எடுத்திருக்கின்றான்" எனவும் பெருமையுடன் கூறியுள்ளார் பி.வாசு.
Listen News!