• Nov 17 2024

பிரபல இசைக்கலைஞரின் இசைக்கருவியை வலுக்கட்டாயமாக எடுத்துச்சென்ற ஏ. ஆர். ரகுமான்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

வலுக்கட்டாயமாக என்னுடைய இசைக்கருவியை ஏ ஆர் ரகுமான் தூக்கிச் சென்றார் என்று செலோ செல்வராஜ் அளித்திருக்கும் பேட்டி தற்போது சமூகவலைத்தளத்தில்  வைரலாகி வருகிறது. 

இந்தியளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளராக திகழ்பவர் ஏ. ஆர். ரகுமான். மேலும் இவர் சிறுவயதில் தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பான `வொன்டர் பலூன்’ என்ற நிகழ்ச்சியில் வாசித்துப் மக்கள் மத்தியில் துனுகு்குனு ஒரு இடத்தை படித்து  பிரபலமாகி இருந்தார். அதன் பின்னர் இவர் பல இசைக் கச்சேரிகளில் கலந்து கொண்டு தன்னுடைய தனித்துவத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

மேலும், இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தன்னுடைய இசை பயணத்தை தொடங்கி இருந்தார். இவர் தனது முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார்.  ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமானது ரோஜா படம் என்றாலும் அதற்கு முன்பாக இளையராஜா, டி ராஜேந்தர் என்று பல்வேறு இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக பணியாற்றி இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மேலும், இவர் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.

இந்நிலையில் ஏ ஆர் ரகுமானுடனான தன்னுடைய இசை பயணத்தை பிரபல பத்திரிக்கைக்கு செல்வராஜ் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது...

பாலச்சந்திரனின் புன்னகை மன்னன் என்ற படத்திற்கு இசையமைத்தேன். அப்போது இந்தியாவிலேயே முதன் முதலாக இளையராஜா பாடல்கள் கணினியை பயன்படுத்தி பதிவு செய்திருந்தார்கள். அதற்கு ப்ரோகிராமி, சாம்பிளிங், மிக்சிங் எல்லாம் செய்தவர் ரகுமான் தான். அப்போதில் இருந்து எங்களுடைய நட்பு பயணம் ஆரம்பமாகியது.இதன்  பின் ரோஜா பட பாடல்கள் ரிக்கார்டிங்கில் வயலின், செலோ வாசிக்க ரஹ்மான் என்னை அழைத்திருந்தார். அப்போது நான் வேறு இசையமைப்பாளர்களின் ரெக்கார்டிங்கில் பிஸியாக இருந்தேன். அதனால் என்னால் வர முடியாதென்று கூறிவிட்டேன்.



அப்போது ரகுமான் ஒரு வெள்ளை அம்பாசிடர் வைத்திருந்தார். நான் ரோஜா பட பாடலுக்கு வாசிக்க கண்டிப்பாக வரவேண்டுமென்று அழைத்து இருந்தார். ஆனால், நான் முடியாது என்று மறுத்து விட்டேன். இதன் பின் அவர் என்னுடைய செலோ கருவியை அவருடைய காரின் உள்ளே வைத்துக் கொண்டு எடுத்து சென்று விட்டார்.


வேறு வழி இல்லாமல் நான் அவரை பின்தொடர்ந்து அவருடைய ஸ்டுடியோவுக்கு சென்று ரோஜா பட பாடல்களுக்கு வாசித்தேன்.மேலும்  இப்படி எங்களுடைய இசை பயணம் 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்கிறது. இன்றும் அவருடைய பாடல் ரெக்கார்டிங் உள்நாடு, வெளிநாடு, கச்சேரிகளுக்கு நான் வாசித்து வருகிறேன். 


அத்தோடு மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் பாடலுக்கு ரகுமான் துபாய் சென்றிருந்தார். அங்கு பழங்கால இசைக்கருவிகளை தேடி வாங்கி பயன்படுத்திருந்தார். பின்னணி இசைக்கு என்னுடைய டபுள் பாஸ், செலோ, வயோலா, வயலின், கிளாரினெட், டிரம்பெட் கருவிகளை பயன்படுத்தி இருக்கிறார் என்று கூறியிருந்தார்.

Advertisement

Advertisement