சமீபகாலமாக ஒடிடியில் நிறைய வெப் தொடர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.அந்த வகையில் ஷு 5 தமிழில் அயலி என்ற வெப் தொடர் வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து அயலி தொடரின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இப்போது அந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஒரு கிராமத்தில் அயலி என்ற கடவுளை வணங்குகிறார்கள். அந்த கிராமத்தில் உள்ள பெண் பிள்ளைகள் பருவமுற்றதும் படிப்பை நிறுத்திவிட்டு உடனே திருமணத்தை நடத்த வேண்டும். இல்லையென்றால் சாமி குற்றம் ஆகிவிடும் என்று கிராம மக்கள் நம்பி வருகிறார்கள்.மேலும் தன்னுடைய கிராமத்தில் உள்ள பெண்கள் எல்லோருக்குமே தன் மூலம் விடிவு காலம் பிறக்க வேண்டும் என்பதற்காகவும், கிராம மக்களின் மூடநம்பிக்கைகளை உடைக்க வேண்டும் என்று தமிழ்ச் செல்வி என்பவர்போராடுகிறார். இதனால் தான் பருவமடைந்த விஷயத்தை தன்னுடைய தாயை தவிர மற்றவர்களிடமிருந்து மறைக்கிறார்.
அதுமட்டுமின்றி அந்த கிராமத்திலேயே முதல் முதலாக தமிழ்ச்செல்வி 10ஆம் வகுப்பு பயல்கிறார். இதைத்தொடர்ந்து அவர் மேற்படிப்பை படிக்க கிராம மக்கள் தடை போடுகிறார்கள். அந்த கிராம விதிப்படி பருவமடைந்த பெண்கள்தான் படிக்கக் கூடாது என்பதால் தமிழ் செல்வியின் தந்தை என் மகள் இன்னும் பருவம் அடையவில்லை அப்புறம் என்ன உங்களுக்கு என கேள்வி கேட்கிறார்.கடைசியில் தமிழ்ச்செல்வி பிற்போக்கு எதிராக போராடி தான் நினைத்தபடி மருத்துவர் ஆகிறாரா, இவரை போல் அங்குள்ள மற்ற பெண்களுக்கும் சுதந்திரம் வாங்கி தருகிறா என்பதுதான் அயலி தொடரின் மொத்த கதை. இப்போது அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் எத்தகைய வளர்ச்சி அடைந்தாலும் நிறைய இடங்களில் பிற்போக்கு சிந்தனை உடையவர்கள் உள்ளார்கள்.
அதை வெளிப்படுத்தும் விதமாக இயக்குநர் முத்துக்குமார் அயலி தொடர்கதையை எடுத்துள்ளார். இப்போதே இந்த ட்ரெய்லரின் மூலம் ரசிகர்களின் பாராட்டல் தான் விதைக்க வேண்டிய விஷயத்தை அழுத்தமாக இயக்குநர் கொடுத்துள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த முழு தொடரை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!