தென்னிந்திய சினிமாவின் பல ரசிகர்களின் கனவு நாயகியாகத் திகழ்ந்து வருபவர் ஆன்ட்ரியா. இவர் சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து அசத்தி வருகிறார்.
அந்தவகையில் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் 'அனல் மேலே பனித்துளி'. இப்படம் ஆனது நேரடியாக சோனி லைவ் ஓடிடியில் நவம்பர்18-ஆம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் வெளியாக உள்ள நிலையில் ஆன்ட்ரியா பல ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். இதில் அவர் படம் பற்றிக் கூறுகையில் "இந்தப் படத்தின் கதையை கேட்டதும் நான் கதையுடன் அப்படியே ஒன்றிவிட்டேன்.
மேலும் நான் ஒரு நடிகையாக இந்த படத்தில் நடிக்காமல் ஒரு பெண்ணாக உணர்ந்து இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்" எனக் கூறியிருக்கின்றார்.
அதுமட்டுமல்லாது "நம் நாட்டில் பல பெண்களுக்கு இது போன்ற பல கொடூரமான பிரச்சனைகள் இருக்கிறது அவை யாவும் உலகுக்கு தெரியவேண்டும் என்று நினைத்தேன். இப்படத்தில் மதி என்ற கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன்.
பல கனவுடன் சென்னைக்கு வரும் ஒரு பெண்ணின் கதைதான் இப்படம். பாலியல் வன்முறைக்குள்ளாகும் ஒரு பெண் எப்படி முடங்குகிறாள் என்பது தான் இப்படத்தின் உடைய மையக்கருத்தாக காணப்படுகின்றது.
மேலும் "ஒரு பெண் கற்பழிக்கப்பட்டுவிட்டதால் அந்த பெண் உடை அணியும் விதம் குறித்துத்தான் இந்த சமுதாயம் பல கேள்விகளைக் கேட்கிறது. ஆனால் நான் கூறுகின்றேன், ஒரு பெண்ணின் மானம் அவள் அணியும் உடையில் இல்லை, வாழும் வாழ்க்கையில் உள்ளது என்று" ஓப்பனாகப் பேசியுள்ளார் ஆன்ட்ரியா.
Listen News!