• Nov 14 2024

துணிவு பட பாணியில் வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி செய்து தர்ம அடி வாங்கிய இளைஞன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விசாரணையில் திண்டுக்கல் பூச்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த கலில் ரகுமான்(25) என தெரியவந்தது.  சமீபத்தில் வெளிவந்த துணிவு படத்தை பார்த்து அதேபோல வங்கியில் கொள்ளையடித்து குறுகிய காலத்தில் மிகப்பெரிய தொகையை கொள்ளையடித்து வாழ்க்கையில் செட்டிலாக இதை செய்தாக கூறினார். பட்டப்பகலில் வங்கிக்குள் புகுந்து வாலிபர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பூச்சி நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கலீல் ரகுமான். 25 வயதான கலீல் வேலை இல்லாததால் வெட்டியாக பொழுதை கழித்து வந்துள்ளார். துணிவு படம் பார்த்த கலீல் ரகுமானுக்கு, நாமும் வங்கியில் கொள்ளைஅடித்து வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என விபரீதமான எண்ணம் தோன்றியதால்,வங்கியை கொள்ளை அடிக்க பிளான் போட்டுள்ளார்.


இதற்காக திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு கையில் மிளகாய் பொடி, ஸ்பிரே, கட்டிங் பிளேடு உட்பட பொருட்களை எடுத்துச்சென்றுள்ளார். வங்கியில் 4 பேர் மட்டும் இருப்பதை தெரிந்து கொண்ட கலீல் ரகுமான், ஊழியர்கள் மீது மிளகாய் பொடியை தூவி, 3 ஊழியர்களை கயிற்றால் கட்டிப்போட்டுள்ளார்.


வங்கியில் நடக்கும் நிலைமையை புரிந்துகொண்டு சாதூர்யமாக செயல்பட்ட வங்கி ஊழியர் ஒருவர் வெளியில் ஓடிவந்து கொள்ளை கொள்ளை என கூச்சலிட்டார். இதையடுத்து, அப்பகுதி மக்கள் கும்பலாக வங்கிக்குள் புகுந்து, கலீல் ரகுமானை சுற்றிவளைத்து தர்ம அடி கொடுத்தனர். இதனை அடுத்து திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து, போலீசார் அவனை கைது செய்து திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், வாழ்க்கை வெறுத்து விட்டதாகவும், இதனால் துணிவு படம் பார்த்து வங்கியை கொள்ளை அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement

Advertisement