• Sep 20 2024

கிருஷ்ணர் வேடத்தில் நம்ம தளபதி... அட கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷலா..? வைரலாகும் புகைப்படம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக பல ஆண்டு காலமாக வலம் வருபவர் நடிகர் விஜய். 'தளபதி' என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகின்ற இவர் தன்னுடைய திறமையான நடிப்பினாலும், சாந்தமான குணத்தினாலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மனங்களை வென்றிருக்கின்றார். 



அந்த வகையில் இவரின் நடிப்பினை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ரசிகர் கூட்டமோ ஏராளம். இந்நிலையில் இவரின் நடிப்பிலும் வம்சி இயக்கத்திலும் தற்போது 'வாரிசு' என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இறுதியாக வெளியாகிய 'பீஸ்ட்' திரைப்படம் ஆனது எதிர்பார்த்த அளவிற்கு இவருக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்கவில்லை. இதனால் இப்படத்திற்கு இப்போதிருந்தே எதிர்பார்ப்புக்கள் கிளம்பத் தொடங்கியிருக்கின்றன.



அதிலும் குறிப்பாக இப்படத்தின் ஃப்ரஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை தொடர்ந்து முதல் பாடல் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள். 'வாரிசு' படத்தை முடித்தவுடன் அடுத்ததாக லோகேஷ் கனகராஜுடன் 'தளபதி 67' படத்தில் விஜய் கைகோர்க்கவுள்ளார். அப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகின்றது.



இந்நிலையில் இன்றைய தினம் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு விஜய்யின் அன்சீன் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதாவது கிருஷ்ணஜெயந்தி ஸ்பெஷலாக கிருஷ்ணர் வேடத்தில் இருக்கும் நடிகர் விஜய்யின் சிறு வயது புகைப்படம் ஒன்றே இணையத்தில் கசிந்திருக்கின்றது. இதனைப் பார்த்த தளபதி ரசிகர்கள் அப்புகைப்படத்தினை சமூக வலைத்தளங்களில் அதிகளவில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement

Advertisement