சிம்பு நடிப்பில் உருவாகிருக்கும் பத்து தல திரைப்படம் உலகம் முழுவதும் இன்று பிரமாண்டமாக வெளியாகிறது. கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மஃப்டி படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவாகியுள்ளது.
கெளதம் கார்த்திக், கெளதம் கார்த்திக் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதையின் நாயகியாக பிரியா பவானி ஷங்கர் தோன்றுகிறார். அனுசித்தாரா, கலையரசன், ரெடிங் கிங்ஸ்லீ, நமோ நாரயணா உள்பட பலரும் நடித்துள்ளார்.
நடிகர் ஆர்யாவின் மனைவியும், நடிகையுமான சாயிஷா சைகல் ராவடி என்ற பாடலுக்கு ஐடம் டான்ஸ் ஆடியுள்ளார். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டான நிலையில், படம் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தப் படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகும் நிலையில் படத்தின் ரிலீஸை சிம்புவின் ரசிகர்களை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்.
முன்னணி ஹீரோக்களின் படங்கள் காலை 5 மணிக்கே முதல் காட்சி திரையிடப்படும் ட்ரெண்ட் கோலிவுட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், வழக்கம் போல் 8 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் உள்பட தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான திரையரங்குகளில் படத்தின் முதல் காட்சி வழக்கம்போல் காலை 8 மணிக்கே முதல் காட்சி திரையிடப்படுகிறது. ரசிகர் ரிலாக்ஸாக காலையில் வந்த படத்தை பார்க்கவே 5 மணி காட்சிக்கு பதில் 8 மணி காட்சி முதல் படத்தின் திரையிடல் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
படத்தின் ரிலீஸை கொண்டாடும் விதமாக அதிகாலை முதலே சிம்புவின் ரசிகர்கள் திரையரங்கில் குவிந்து ஆரவாரம் செய்து வருகின்றனர். மேள தாளத்துடன் ஆட்டம் ஆடி, பட்டாசு வெடித்து கொண்டாடியதோடு, தேங்காய் உடைத்தும் படத்தின் ரிலீஸை வரவேற்கின்றனர்.
இதற்கிடையே சில இடங்களில் அதிகாலை காட்சி திரையிடப்பட்ட நிலையில் ரசிகர்கள் பலரும் படத்தை ஆர்வத்துடன் பார்த்து ரசித்துள்ளனர். அதிகாலை காட்சி பார்த்து வந்த ரசிகர்கள் படம் அருமையாக இருப்பதாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். கமல்ஹாசனின் விக்ரம் படம் போல் மாஸ் ப்ளஸ் கிளாஸாக இருப்பதாக படம் மீது நேர்மறையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
#PathuThala #SilambarasanTR Just the start. pic.twitter.com/4T45BwjAil
— Hariharan Gajendran (@hariharannaidu) March 30, 2023
Listen News!