• Sep 20 2024

தனுஷ் குடும்பத்திலிருந்து புது ஹீரோ!..இதுக்கு இயக்குநரே இவர் தானா? வெளியான சூப்பர் அப்டேட்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா முன்னணி நடிகர்களில் ஒருவராக தனுஷ் திகழ்கிறார் .அந்தவகையில் கோலிவுட் பாலிவுட், ஹாலிவுட் படங்களில் நடித்து வருபவர் நடிகர் தனுஷ். 


அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், ‘கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். பீரியட் படமாக உருவாகும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தற்போது தனது 50 படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் வைரலானது. இப்படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மதுரை அன்பு தயாரிக்கும் ஒரு படத்தில் தனுஷின் அக்கா மகன் ஹீரோவாக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும் இப்படத்தை தனுஷ் தான் இயக்குவதாகவும் சினிமா வலைப்பேச்சு பிஸ்மி கூறியிருந்தார் . ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை.  எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement