பிரபல இயக்குநராகிய ஓம் ராவத் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் மற்றும் க்ரித்தி சனோன், சைஃப் அலி கான் ஆகியோர் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்'. அந்தவகையில் இப்படமானது இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக சமீபத்தில் வெளியாகியுள்ளது.
இப்படமானது முதல் நாள் வசூலில் சற்று சரிந்தாலும் அடுத்தடுத்து வந்த நாட்களில் வசூல் ஆனது அதிகரித்து சென்றுள்ளது. ஆனால் நேற்றைய தினம் இப்படத்தினுடைய வசூல் மீண்டும் சரிந்துள்ளது.
அந்தவகையில் இப்படம் வெளிவந்து நான்கு நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை ரூ. 330 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது. மேலும் மூன்று நாட்களில் ரூ. 300 கோடி வசூல் செய்திருந்த இப்படம் நான்காவது நாளில் வெறும் ரூ. 30 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால் படக்குழுவினர் அப்செட்டில் உள்ளனராம்.
Listen News!