இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து மணிரத்னத்தின் மெட்ராஸ் தயாரித்துள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக மேக்கிங் வீடியோவுடன் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டிருந்தார்.இதனால் ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருப்பதோடு இப்படம் செப்டம்பர் மாதம் 30 திகதி உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
இந்த நேரத்தில் இன்று புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தில் வந்தியத் தேவன் கேரக்டரில் நடிக்கும் கார்த்தி குதிரையில் வருவது போன்றும், பேக்கிரவுண்டில் கூட்டமாக பெண்கள் ஒரு புறமும், மற்றொரு புறம் ஆறு பாய்வது போன்றும் அமைக்கப்பட்டுள்ளது.வந்தியத் தேவனுடன் ஆடித்திருநாள் கொண்டாட்டம்…பொன்னி நதி என்ற கேப்ஷனுடன் இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர், பொன்னி நதி, வந்தியத் தேவனுடன் ஆடித் திருநாள் கொண்டாட்டம் ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது பொன்னி நதி என துவங்கும் இந்த பாடல் தான் படத்தின் ஓப்பனிங் சாங்காக இருக்கும் என்பது தெரிகிறது. பொன்னியின் செல்வன் கதையின் துவக்கமே வந்தியத்தேவன் சோழ நாட்டிற்கு குதிரையில் வருவதும்,மக்களின் ஆடிப்பெருக்கு கொண்டாட்டத்தை ரசித்த படி வருவதாக தான் கதையின் பயணம் துவங்கும். அதனால் வந்தியத் தேவனின் இன்ட்ரோ சாங்காகவும், படத்தின் ஓப்பனிங் சாங்காகவும் இது இருக்கலாம் எனவும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
பிற செய்திகள்
- விஜய்டிவியின் முக்கிய சீரியலில் கமிட்டான கோகுலத்தில் சீதை தொடரின் கதாநாயகன்- அடடே இந்த நடிகரா?
- படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தால் படுகாயம் அடைந்த கோமாளி பட நடிகை
- போதையில் காரை அதிவேகமாக ஓட்டிய நடிகை- பதுங்கி இருந்து மடக்கிப் பிடித்த போலீஸார்- பாலியல் தொழிலும் செய்தவரா இவர்
- குடும்பத்தினருடன் இலை சாப்பாடு- தனுஷ் மற்றும் செல்வராகவனுடன் குக்வித் கோமாளி வித்யுலேகா
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!